சந்தம் சிந்தும் கவிதை

திருமதி.அபிராமி கவிதாசன்.

21.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-210
தலைப்பு !
“ சாதனை “
சாதனைப் பூக்களும் சரித்திரம் படைக்க
சவாலாய் தேற்றிய சகோதரர் வாழிய

போதனை பாங்குடன் போற்றுவார் சிறப்பினை
பாதகம் அறிந்திடா பண்பாளர் வாழிய

சோதனை காலமும் சோர்ந்திடா
தைரிய
சாதுவாய் சாதிக்கும் சங்கீதர் வாழிய

வேதனை மனமும் வினோதம் அடைய
வாரம் கவிதரும் வள்ளல் வாழிய

உன்னால் முடியுமென்று ஊக்கம் தருவார்
உன்னத படைப்பை உருகி வடிப்பார்

நன்றது ரசித்து நகைக்க தருவார்
நன்நெறி பண்பினை நாளும் வளர்ப்பார்

துன்பம் மறைத்து துணிவாய் வருவார்
தூணாய் நின்று துலங்கச் செய்வார்

இன்முகம் மாறா இளமை குணத்தார்
இன்றும் என்றும் இவரோ பாலகராம்

நன்றி வணக்கம்🙏