சந்தம் சிந்தும் கவிதை

திருமதி அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -173. 09.06.2022
தலைப்பு !

“அன்றிட்டதீ நிழலாடும் நினைவுகள்”

அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள்
தோன்றிட நெஞ்சினில் துளைக்குதே
இதயத்தை //

அறிஞர்களின் போதிமரம் அறிவுப்பெட்டகம் யாழ்நகர்
அறியாமையின் இருள்களைந்த அகல்தீபம் நூலகம்//

வாசிப்பு விதைதூவி விருட்சமான
கல்விக்கூடம்
நேசிப்போர் நெஞ்சத்தில் நிறைந்திட்ட கலைக்கூடம் //

இல்லத்து நூலகம் இலங்கை நூலகம்
சொல்வலிமைப்
பிறப்பெடுத்து சோலையான தமிழ் வனம் //

சோலைவன மலர்த்தோட்டம் சோதனையின் உயிரோட்டம்
பாலைவனமாய் எரியூட்டப்பட்டு
பாலில்நஞ்சு கலந்த நாள் //

தமிழகநூலகம் எரிப்புநாள் தமிழர்களின இதயம்பிழப்புநாள்
அமிழ்துமொழி அழகுதமிழ் அன்னைமொழி இழப்புநாள்

கல்லறையான தமிழரின் கரைபடிந்த
காவியம்
இல்லறமும் எரிந்துபோனதாய்
இதயவேதனை ஓவியம் //

கலைக் களஞ்சியமான கல்விச் சாலை
கல்லறையான காட்சி தோற்றம்
விலையென்ன கொடுத்தாலும்
வாங்க முடியுயா வாணிபம் //

நிகழ்வை நேரில்கண்டு நெஞ்சம்
பொறுக்காது
அகம் நொந்து உயிர்விட்ட
அணைந்த உன்னதரும் உண்டு //

சிங்கள பேரழிவுக்கார சினவேட்டை
கொடுமை
அங்கம் நடுங்கும் அழிப்புதினம் தொடக்கம் //

எங்கே நல்லநூல்கள் எரிக்கப் படுகின்றனவோ
அங்கே நல்ல மனிதர்களும்
எரிக்கப்படுவார்கள் //

படிப் படியான அடுக்குமாடி பாழ்பட்ட
போராட்டம்
துடிதுடிக்க கருகிமாண்டு துன்பம் கண்ட இருண்டகாலம் //

மீண்டும் மீண்டும் மாண்டெழுந்து்
மடிந்தன
அண்டாண்டு ஆவணங்கள் அழிந்து
ஒழிந்தன //

அடையாள தமிழரின் அழிப்பு
யாழ் நூலகம
விடைபெற முடியாது விதி போட்ட
தாளது //

விதைக்கப்பட்ட வித்துகள் விருட்சம் சாம்பலாகி
புதைக்கப்பட்ட உயிரிழப்பு புன்னகை இழப்புநாள் //

கலைமகள் கல்விதாயின்
கலைக்கோபுரம் கரிகியநாள்
சிலையாகி தமிழர்கள் சிறகொடிந்து
துடித்தனர் //

ஆராதவடுவான அடையாளஅழிப்பு
நாள்
தீராத துன்பங்கள் தீவினை சூழ்ந்தநாள் //