சந்தம் சிந்தும் சந்திப்புக்காக….07.06.2022
தலைப்பு !
“பழமை”
நெடுநாள் நட்புறவே
நெறிபிறழா அன்புறவே
வெடுக்கென என்னைநீ
விட்டுப்பிரிய பொறுக்கலையே //
ஓராண்டா ஈராண்டா
ஒன்றான நம்நட்பு
தோராயமின்றி ஆண்டான்டாய்
தோன்றியதே நீண்டகாலம் //
மாண்டாலும் மறையாத
மாண்புடை புகழரசி
ஆண்ட வாழ்விற்கு
அர்த்தம்நீயன்றோ //
தொன்மை உறவின்
தோழமை நட்பு
மென்மை மக்கள்
மேன்மக்கள் மேன்மக்களே //
முதன்மை வித்தே
முத்தான சொத்தே
முத்தமிழ் தாயின்
முத்திரை நீயன்றோ //
கவிப் பார்வை …தொகுப்பாளர்
கவிஞர் பாவை அண்ணா அவர்களுக்கும்
அதிபர் அவர்களுக்கும் என்மனமார்ந்த
நனிநன்றிகள்🙏