வியாழன் கவிதை

தவமலர் கல்விராஜன் வியாழன் கவிதை

வளர்ந்த குழந்தைகள் தாமே..!
வளர்ச்சி கண்டு மகிழ்வோம் நாமே.
அணைத்து அவரை நாமும்.
அவனியில் சிறக்கச் செய்வோம்.
பாமுக சிறப்புக் குழந்தைகள்.
அனைவரும் வளர்ந்த விதம் கண்டு.
உள்ளம் மகிழ்ந்து உவகை கொண்டு
வாழ்த்துவோம் பலரும் இங்கு..!
பூமித்தாயின் மடியில் பூக்களாய் மலர்ந்த குழந்தைகள்.
என்றும் மலர்ந்து மணம் வீச.
நாமும் போற்றி மகிழ்ந்திடுவோம்..!

– தவமலர் கல்விராஜன்
Germany.