சந்தம் சிந்தும் கவிதை

தலைப்எபு பரவசம்

முன்எடுத்த சந்தக்கவி நிகழ்வு
மூன்றாண்டை தாண்டியதில் மகிழ்வு
இன்நிகழ்வில் பல கவிஞர் இணைவு
இவர் கவிகள் பல வடிவாய் முகிழ்வு
*ஆக்கங்கள் உள்ளத்தால் பூக்கும்
அழகாக கவிக்கு உரு சேர்க்கும்
தாக்கத்தைஉணர்வோடு கோர்க்கும்
சந்தலய கவிதைகளை ஆக்கும்
* வரிவரியாய் கவிக்கனியை பிழிந்து
வானலையில் என் உணர்வை பதிந்து
விரிந்த நிகழ் வால்உறவு மலர்ந்து
விழைந்தேனே நூல் தொகுக்க விரைந்து
*இருபதின்மர் விரும்பி அதில் இணைய
எல்லோர் தம் பங்களிப்பும் நிறைய
விரிந்த தொரு பாமுகப்பூ மலர்ந்து
வினைதிறனின் பெறுபேறாய் சிறந்து
*பேரின்ப நிலை உதிரும் பரவசம்
பெற்றேள் யான் அரியதுர அதிரசம்
ஊரும்உள உணர்வில் எழும் நவரசம்
உளம் உதிர்த்த கவிநூலின் பரவசம்

*