வியாழன் கவிதை

” தடமது படைத்தெழும் தனித்துவம் “

ரஜனி அன்ரன்

“ தடமது படைத்தெழும் தனித்துவம் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 06.06.2024

முதல் ஒலியாய் ஒலித்து
முழுமதியாய் நிறைத்து
முத்தமிழை வளர்க்க
இலண்டன் நேரமாகி
இலண்டன் தமிழாகி
கண்டமெல்லாம் கடந்து
அண்டமெல்லாம் நிறைந்து
பாரெல்லாம் ஒளிரும் பாமுகமே !

தடமது படைத்திடும் தனித்துவமாய்
தமிழதை வளர்த்திடும் மகத்துவமாய்
தலைமுறை நோக்கிய பயணமதாய்
தடயத்தைப் பதித்து மகுடத்தைச் சூடும்
தரணியில் உன்பணி தனித்துவமே
தனித்துவத்திலும் ஒரு வித்தகமே !

இணையத்தின் துடுப்பில்
இளையவர் தொகுப்பில்
எழுத்தின் வேரில் படைப்பின் உயர்வில்
உருவாக்கப் படைப்பில் இமயம் நீ
உலக வலத்தில் உனக்கு மட்டுமே
உரித்தான வித்தகம் அதுவே தனித்துவம்
பாமுக ஒளியே பரிதியின் சுடரே
வாழிய பல்லாண்டு வளமோடு நீ !

https://www.youtube.com/watch?v=kJOxwvnftBU