வியாழன் கவிதை

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

அகிலம் எங்கும் எழில் முகம் பெருகிட
இயற்கையின் வார்ப்பு
தண்ணீர் அல்லவா
அறிந்தும் தெரிந்தும் நம்
அலட்சிய போக்கால் கரையும்
தண்ணீரால் மனித வாழ்நாள் குன்றுதே
தண்ணீரின் பவித்திரம் பேனாத கல்வியால்
தொழில்சாலை கழிவுகள்
நிறைந்தே தொடருதே
மாசு பட்ட நீரும் மண்ணின்
வளமும் மனிதனின் ஆயுளை
குறைத்தே நகருதே
தொழில் நுட்ப ஆளுமை
நமக்கு வேண்டும் விழிப்பினை
கையில் விரைந்தே கொண்டு
சூழற்சி முறையில் கழிவுனை
மாற்றி பசுமை உலகை
படைத்திட முயல்வோம்!!