வியாழன் கவிதை

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி :
“கைக்குள் கையாய் கை தொலை பேசி”

கைக்குள்ளே உலகை
தந்து நிற்பாய்
நம் காரிய நகர்விற்கு
தொழில் நுட்ப தூரிகை ஆனாய்

இடை வெளி குறைத்திடும்
பாலமாய் நின்று
உறவுடன் உலா வரும்
காற்றலை ஆனாய்

நமக்கு நாமே நம்பிக்கை
கொண்ட புத்தகம் ஆனாய்
நாள் தோறும் துயில் எழும்
சூரியன் ஆனாய்

வரவு எட்டு செலவு பத்தென
அறிந்து கொண்ட
பொழுதைப் போக்க புன்னகை வீசும்
முகத்திரை ஆனாய்

போவது போகட்டும்
ஆறிலும் பத்திலும் சாவு நிச்சயம்
இடை வெளி வாழ்வினில்

கைக்குள் கையாள தொலை பேசியே
வழித்துணை கைத்தடி ஆனது