வியாழன் கவிதை

தங்கசாமி தவகுமார்

கவி : மௌனம்
31.03.2022

சுற்றுகின்ற உலகோடு
சுற்றுகின்ற மானிடம்
சுதாகரிக்க தம்மை தாம்
தவம் ஒன்று வேண்டின்
அதுவே மௌனம்
தவ வேள்வி ஒன்று செய்வோம்
அங்கு மௌனம் அது நெய்யாகும்

மனங்களை மனம்
மார்பினிலே சுமக்க
மடி சுரக்கும் பசுவாக
சுரக்கின்ற ஊற்று
கண் மூடி மௌனம் அது
கற்று தரும் படிப்பு

சுற்றி உள்ள சூழல்
தேடி வரும் உரை
எப்பொழுதும் மௌனத்தை
கலைத்து தன் தேவைகளை முடிக்கும்!!!