வியாழன் கவிதை

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி – துளி நீர்
தங்கசாமி தவகுமார்
24.03.22

அசட்டு தன உலகிற்கு
ஆண்டு தோறும் ஓர் தினம்
எச்சரிக்கை காட்டி வந்து
விழித்து கொள்ள விடியல் தரும்!!!

நமக்கு என்றும் ஆதாரம்
ஆகாய ஆதவனும்
பூலோக புவி மகளுமே
இவற்றுக்கு என்றும் ஆகாரம்
துளி நீர் அதுவே!!!

நீர் இன்றியும் உயிர் போகிறது
மிகையான நீரும்
அழிவை தருகிறது

அதை அதை பகுத்தறிந்து
பக்குவம் பேணுவதே
ஓர் படி அறிவு அதிகம் கொண்ட
மானிடருக்கு துடுப்பு

தேவைக்கு ஏற்ப நீரோடு இணைந்து
நம் தேவைகளை நிறை செய்வோம்

நன்றி
தவகுமார்