வியாழன் கவிதை

தங்கசாமி தவகுமார்

கவி : விடியலின் உன்னதம்
03.03.2022

கிழக்கு வெளிக்கும் உன்னதம் கண்டு
உள்ளத்தில் ஒரு படி உற்சாகம் மேவிடும்
நேற்றை பொழுதின் தடங்கல் கையினில்
இன்றைய பொழுதை திறம்பட நகர்த்த
விடியலின் கதிரொளி உன்னத ஊற்று
தூங்கிய புல்லினம் பூவினம் பட்சிகள்
இன்றுதான் பிறந்தோம் என்ற உன்னதம் விடியலில்
அரிதிலும் அரிய உயிர்ப்பிற்கு கதிரவன்
அவனே கருணைக்கு முதல்வன்
விடியலில் அவன் வடிவம் காண்பது
நம் வாழ்விற்கு மலர்வு
போட்டியும் புகழும் ஆதிக்க வெறியும்
நிறைந்த அரசியல் சந்தையில்
நாணயமும் நம்பிக்கையும் வெளிச்சமிட
மனிதம் பிறக்க இன்றைய விடியலும்
நாளைய விடியலும் வெளிச்சத்தை தரட்டும்!!!