கவி : கவிதானிக்காய் வேண்டுதல்
24.02.2022
சுட்டெரிக்கும் சூழலிலும்
தம் கவி சுவையை வரியாக்கி
மொழி அமுது சுவைப்பவர்கள்
யார் ஒருவரையும் புறம்தள்ளது
கம்பீர மணிக் குரலால்
சிகரத்தில் ஏற்றி வைக்கும்
கவிதாயினியை சில மாதம் பல வாரம்
காணாது காத்திருக்கும்
பாமுகம் தேடி நிற்கும் கவிதை நேரம்
இன்று வியாழன்
தமிழ் கடலில் மூழ்கி முத்தாக
ஒலி ஒளியில் தந்து நிற்கும்
கலையகமும் வழியாவே!
தமிழ் சொல்லை கவித்துவத்தை
அரியனையில் ஏற்றுகின்ற
கவிதாயினியை பத்திரமாய்
பாதுகாக்க தமிழ் தாயை வேண்டுகிறேன்!!
நன்றி