சந்தம் சிந்தும் கவிதை

ஜெய நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.03.2023
இலக்கம்-214
தீ
——-/———
ஐம்பூதங்களின் ஒன்றான தீ
இயற்கையின் கொடையே
நெருப்பு,சுடர்,தணல்,வெப்பம் என்பன பதமே
தீ என்பது சுவாலையின் குணம் வெப்பமே
காட்டுத் தீ பரவி காடுகளை அழித்திடுமவாயே
தீ குச்சி ஒன்றே போதும்
உடமைகளை எரித்து சாம்பலாக்குமே
மெழுகுவர்த்தி தீயாய் எரிந்து தானே உருகிடுமே
இந்து கோவில்களின் தீச்சட்டி நேர்த்தியை பூர்த்தியாக்குமே
தீ பந்தம் கொழுத்தி இறப்போர் இறுதிக் கிரியையில் சுற்றி எரியுமே
தீ பொறி சஞ்சிகை தீயான செய்திகள் பொறி பறக்குமே
பெண்ணே நீ தீயாய் எழுந்து புது உலகம் படைத்திடுவாயே
திருமதி ஜெயா நடேசன் ஜேர்மனி