சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-12.09.2023
கவி இலக்கம்-231
மலைப்பு
———————
விண்ணில் சந்திராயன் 3 கால் பதிப்பு
மண்ணில் விஞ்ஞானிகள் மனக் களிப்பு
சில நாடுகளில் காட்டுத் தீ அழிப்பு
பல இடங்களில் வெள்ளப் பெருக்கு
பணக்கார்ர்கள் பணக் குவிப்பு
ஏழைகள் வயிற்றுப் பசியால் தவிப்பு
போதை வஸ்தினால் இளையோர் பாதிப்பு
பெற்றோர் கண்டு கவலையில் மலைப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டு அழிப்பு
அரசாங்கமே தொடர்பென மலைப்பு
கடும் வெப்பம் உலகமே வியப்பு
தாங்க முடியாத நிலையில் மக்கள் வியப்பு
ஜெயா நடேசன்