சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.2023
இலக்கம்-229
வாக்கு
—————-
எமது வாக்கே எம் செல்வாக்கு
வாக்கு தவறினால் குறையும் செல்வாக்கு
அம்புலி மாமா காட்டிய அம்மாவின் பொய்வாக்கு
மழலையின் சொல்லோ நல் வாக்கு
மூத்தோர் சொல் அமிர்த வாக்கு
இளையோர் மறுப்பது வெறு வாக்கு
பெற்றோரை ஏமாற்றி பிள்ளைகள் பல வாக்கு
பெற்றோர் ஏமாறி வாழ்வது குறை வாக்கு
அரசியல் வாதிகள் வீடு வீடாக தேர்தல் வாக்கு
மக்கள் அள்ளிக் கொடுப்பது நல் வாக்கு
ஏமாற்றம் பெறுவது பொய் வாக்கு
பக்தர்கள் இறைவனிடம்
கேட்பது இறை வாக்கு
இறைவன் கொடுப்பது அருள் வாக்கு
ஜெயா நடேசன் ஜேர்மனி