சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.02.2024
இலக்கம்-253
பிள்ளை கனியமுது”
பிள்ளை கனி வேண்டி
தவமிருந்தாள் என்தோழி
தலைக்கு தலை மகனாய்
ஆண் கனி பிறந்தான்
அள்ளி அணைத்து உச்சி மோந்தாள்
கிள்ளை மொழி பேசி
கேட்டு மகிழ்ந்தாள்
தோளுக்கு மேல் வளர்ந்து கனியானான்
புதுமை உலகில் புதுமைகளாகி முத்திய கனியாகி சாய்ந்தான்
ஜெயா நடேசன் ஜேர்மனி