சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 07.12.2023
இலக்கம்-245
காதல்
கா-காத்திருந்து
த -தவித்திருந்து
ல் -இல்லாமல்
போவது காதல்
காதல் இன்றேல் சாதல்
பட்டாம் பூச்சியை பறக்க வைக்கும்
காதலர்ர் இதயத்தை துடிக்க வைக்கும்
கண்ணோடு கண் பேச வைக்கும்
அன்பை வெளிப்படுத்தும்
பரிசுப் பொருட்கள பரிமாற்றம் நடக்கும்
உயிரை தியாகம் செய்ய வைக்கும்
காதல் கடிதங்கள் பரிமாற்றம் நடக்கும்
கடற்கரை பூங்கா தியேட்டர் சந்திப்பு இருக்கும்
காமத்திற்காக காதலிப்போர் பலர்
உண்மை காதலால் மணம் முடிப்போர் சிலர்
முதல் காதல் தோற்று விட்டால் கல்லறை வரை நினைவிருக்கும்
காதல் செய்வோர் கலியாணம் செய்வதே உண்மைக் காதலே
ஜெயா நடேசன் ஜேர்மனி