சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்_28.03.2023
இலக்கம்-157
நீர்க்குமுழி
——————-
கொட்டும் மழையினிலே
சொட்டும் பட்டும் மண்ணினிலே
நீர்க்குமுழி அழகினிலே
மயங்கினேன் நினைவினிலே
மறைந்து போனதினிலே ஏமாந்தேன் என்னிலே
காதலன் ஊதிய சவர்க்கார நுரையினிலே
காதலி பிடிக்க ஓடிப்போகையிலே
காற்றோடு கலந்ததிலே
நுழைந்த கவலையிலே
நீர்க்குமுழி வாழ்வு போலவே
சில கனவுகள் நினைவுகளாகவே
வெகு சில காலங்கள் மட்டுமே என் இதயத்திலே
உன் மூச்சில் பிறப்பெடுத்தே
நீர்க்குமிழி ஆகிடுமொ
ஜெயா நடேசன்