சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.10.2023
கவி இலக்கம்-239
ஆறு மனமே
———//-//——
ஆறு மனமே ஆறு -ஆண்டவன் கட்டளைகள் பத்து
இறைவன் அன்பில் தந்த பெரும் கட்டளை
மனிதன் நடை முறை படுத்துகிறானா
களவு செய்யாமலிருக்கிறானா
பொய் பேசாதிருக்கிறானா
விபச்சார செயலில் ஈடு படாமலிருக்கிறானா
தாய் தந்தையரை கனம் பண்ணுகிறானா்
இல்லாதவர்க்கு உதவிக் கரம் நீட்டுகிறார்களா
மனமே சொல் மனமே
வேசம் போட்ட வாழ்க்கை நல்ல விடை தருமா
ஏழையானவன் பணக்காரனாகலாம்
அரசனும் ஆண்டியாவான் சொல் மனமே சொல்
மனம் ஆறி வாழ நல்லவர்களாய் வாழ்ந்து காட்டுவோம்
நல்லது செய்து நாலு பேர் போற்ற வாழ்வோம்
ஜெயா நடேசன் ஜேர்மனி