சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச
வாழ்த்தும் வந்து வாழ்த்துமே

வித்தியாசமான சிந்தனைகள் இதனைக்கேட்டே உதித்தது
சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் சிந்தைக்குள் வசித்தது
செந்தமிழும் நாப்பழக்கமாக கவிதைகளாய்க் குதித்தது
சந்தத்தோடு பாக்களை பாடச்சொல்லி விதித்தது

குழைத்து தமிழமுதை ஊட்டிடவே மொய்த்தார்கள்
முளைத்துவிடும் செவ்வாய்க்குள் அதிசயங்கள் செய்தார்கள்
நுழைந்தவர்கள் இதனுள் முகவரியைப் பெற்றார்கள்
தலையெடுத்து புதுப் பாவலராய் அடையாளப்பட்டார்கள்
ஈர்நூறு வாரமாய்ப் பிறப்பதைக் கண்டு
பாரங்கேபார் சுவைத்தவர் புகழ்ந்திட என்று
வார்த்தை பூமாலையை அணிவித்தே இன்று
ஆர்ப்பரித்தே அகமகிழ்வார் தேன்வண்டாகிக் கொண்டு

நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது இருநூறாவது அற்புதம்
புகழ்ந்துமே கொண்டாடி பாராட்டும் விதம்
அகமுருக்கும் பாவரசின் சொல்லின் இதம்
சுகுமுரசும் உள்ளமுரைக்கும் நன்றிதனை நிதம்

ஜெயம்
15/11/2022