வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

Kavi 654

பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்

அழிந்தாலும் எழுந்தது மீண்டும் அறிவாலயம்
பொசுக்கினாலும் பொலிவுடன் மீளமைந்தது பொக்கிஷம்
பூப்பறித்திட பூக்களை பூத்தது பூஞ்சோலை
தலைமுறையின் எதிர்காலம் தரணியில் தலைநிமிர்ந்தது

செய்தது கொடுமை உலகமே அறியும்
சர்வாதிகாரத்தின் முகத்தையும் முழுமைமாய் தெரியும்
ஆண்டான் அடிமை ஆட்சியின் வெளிப்பாடு
மண்ணெண்ணை தண்ணீர் என்கின்ற உறவோடு

மகத்துவமான அறிவாளிகளின் படைப்புகள் தீயோடு
தீயிட்ட பரம்பரையோ திரியுது தினாவெட்டோடு
சிறுக சிறுக சேமித்தவைகள் சின்னாபின்னமானாலும்
பழிவாங்கியோரையும் பார் பாரென மீளமைந்தது

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடமென்ன
அடுத்தடுத்து எடுக்கப்போகும் வேடங்கள் என்ன
கல்லுக்கு கல்லெனும் நிலையதை மாற்றுவோம்
கல்லையும் கரைத்துமே காரியம் சாதிப்போம்

ஜெயம்
25-05-2023
https://youtu.be/Ks9eBuIrUXU