சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச
அடிநாதம்

மனிதநேயமே இவ் உலகின் அடிநாதம் 
தனியொருவனையும் தவிர்திடலாகாது என்கின்றது வேதம் 
புனிதமான பணியிதுவன்றோ நன்மையாகும் யாதும் 
இனிவருகின்ற வாழ்க்கையதும் இழைத்திடுமோ தீதும் 

உடன்பிறந்தோர் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றார்
குடங்குடமாய் அழுது நாளைக் கழிக்கின்றார்
இடமொன்று அவர்க்கென்று உள்ளத்திலே இருந்துவிட்டால்
தடங்கலின்றி கரமதுவும் அவருக்காக நீண்டுவிடும்

பசித்தவர் பார்த்தும்கூட தானுண்டு மகிழும்
கசிந்து மனமுருகிடாது தான்மட்டும் என்றே
வசிக்கும் வளையாத மனங்கொண்ட
நிலையெதற்கு
விசித்திரமாகவிது இல்லையா முற்றுப்புள்ளி எப்போது

மனவழுக்கைக் களைந்தால் அற்புதங்கள் பிறக்கும்
தனக்கென்று இல்லாமல் குணமிங்கு சிறக்கும்
வணங்கிவிடும் வாழ்வொன்று தரணியிலே தோன்றும்
பிணமான வாழ்வதுவும் உயிர்பெற்று ஊன்றும்
07-03-2023