சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

மொழி

அடையாளம் ஒன்றை இனத்திற்குத் தருவது
படைத்திடப் படைத்திட ஊறியே வருவது
உடைமை இதுவெனவாகி உயிராகவே மாறுவது
தடையின்றியே அறிவை அள்ளியள்ளித் தருவது

பெற்றவளை அம்மாவென அழைக்க எழிலாவது
கற்பனைகள் கொப்பளிக்க வார்த்த்தைகளாய் விழுவது
சிற்றறிவை பேரறிவாக்கி தத்துவங்களாய்ப் பேசவைப்பது
கற்றுவிடக் கற்றுவிட பண்டிதனாய் ஆக்குவது

சிந்திக்க வைப்பதென்பதும் மொழியின் வல்லமையே
சொந்த புத்தியைத் தருவதும் இதனாளுமையே
ஐந்தறிவிலிருந்து ஆறறிவோரை வேறுபடுத்திக் காட்டுவதுமிதே
சந்தத்துடன் எழுதவும் பேசவும் பரிசானதே

இலக்கணமும் இலக்கியமும் இதற்குள்ளே அடங்கும்
உலகம் இதில் ஏழாயிரத்தை அடக்கும்
இலகுவாக நாவினால் உருவாகிடும் ஒன்று
அழகான சொற்களாக பிரசவிக்கும் நன்று

இது அமுதானது தேனானது சுவையானது
அதுவே நிறைவானது மறையானது இறையானது
முதுமை மொழியைக் கொண்டவர்க்கோர் பெருமையே
புதுமைத் திறனும் மொழியினுடைய அருமையே

ஜெயம்
28-02-2023

https://linksharing.samsungcloud.com/hHqNBNF3NdHE