சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

நிச்சயதார்த்தம்

மனத்துள் இதுவரை காணாத மகிழ்வு
தினத்துள் மறக்கமுடியாத அருமை நிகழ்வு
புதியதோர் வாழ்க்கையின் நுழைவிற்கான ஏற்பாடு
குடிபுகுந்தே மறுவீடு வாழ்ந்திடவே சிறப்போடு

பெற்றோரின் விருப்புடனே உறவுகளும் சூழ்ந்திருக்க
கட்டிக்கொள்ள இருப்பவரோ சொர்க்கத்தினுள் வாழ்ந்திருக்க
ஒருவரையொருவர் புரிதலை தொடங்கிடும் நாள்
வருகின்ற நளெல்லாம் வாழ்க்கையில் திருநாள்

திட்டமிட கிடைத்திருக்கும் அற்புத அவகாசம்
விட்டுக்கொடுப்புக்களும் கட்டுப்படுவதுமென கதை பேசும்
பகிர்ந்துகொண்டே அன்பை காதலும் கொண்டு
அகிலத்தில் வலம்வருவீரே நன்மைகள் கண்டு

ஜெயம் தங்கராஜா
06-02-2023
https://linksharing.samsungcloud.com/tdvb1LOUciys