சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

யோசி

உன்னால் முடியும் துணிந்தே தொடங்கு
பின்னால் கிடைக்கும் உயர்ச்சியும்
பன்மடங்கு
யோசி முடிந்தால் வானமும் வசப்படும்
நேசி வாழ்க்கையை உற்சாகம் துளிர்விடும்

ஏற்றத் தாழ்வுகளூடே வாழ்க்கைப் பயணம்
ஏற்றுக்கொண்டே தொடர்ந்து அடைந்துவிடு பயனும்
ஆயிரம் ஆச்சரியங்களை வைத்துள்ளது ஒழித்து
ஆயினும் சோம்பிடாது இருந்துவிடு விழித்து

துன்பங்கள் உன் வாழ்க்கையின் வழிகாட்டியே
உன்னை இக்கட்டில் விட்டுவிடும் மாட்டியே
இறைவன் அளந்த அளவினைக் கொண்டு
தரைமீது வாழ்ந்துவிடு சிறப்பினைக் கண்டு

தோல்விகள் உண்மையில் கற்றுக்கொடுக்கவே வருகின்றது
வாழ்வை சரிசெய்து புரிதலைத் தருகின்றது
சிந்தித்துப்பார் சோம்பேறிகளிற்கு அனைத்துமே கடினம்
மந்தநிலை நீங்கிடவே காட்டிவிடு துடினம்

ஜெயம்
24-01-2023
https://linksharing.samsungcloud.com/cCARIngQk2oI