வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 636

பெருகிடும் வலிமை
பெற்றுயர தடையேது

தோஷங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷம் சேர்ந்திடும்
வாசத்தை நிறைத்துக்கொண்டே பூக்களும் அழகாய்ப் பூத்திடும்
நேசத்தை மின்னும் வைரங்கள் உறவுகளாய்க் கிடைத்திடும்
வாசல் தேடிவந்தே நல்வாழ்க்கை தன்னை காணிக்கையாக்கிடும்

தடைகளை உடைக்கும் வலிமை மனதில் பெருகிடும்
அடைந்துகிடந்த காலம் போயே கோலம் உருமாறிடும்
படைக்கும் காலகட்டம் வாழ்க்கையை வட்டமிட்டே சுத்திடும்
கடைசியில் தொட்டதெல்லாம் பொன்னாகி வாழ்வு கனிந்திடும்

வந்ததென்ன நாளதுவும் காணாத சொர்க்கங்களை கண்டுவிட
தந்துகொண்டு இன்பம் கோடி
வாழ்வை சுவைத்துவிட
வெந்தநிலை நீங்கிடவே சுருங்கிய பொழுதுகள்  விரிந்திடுமே
முந்தைய ஆண்டைப்போலில்லாது இவ்வாண்டு பலத்தை சேர்த்திடுமே

தூங்குவதற்கினி நேரமில்லை சோம்பலும் தள்ளியே போய்விடும்
நீங்கிடும் பிணிகள் நலமான வாழ்வும் வெளிப்படும்
தீங்கின்றி நன்மைகள் விழுகின்ற நிழலெனத் தொடர்ந்திடும்
தாங்கியே சுமக்கும் பூமியிலேயினி விதைத்ததெல்லாம் விளைந்திடும்

ஜெயம்
17-01-2022
https://linksharing.samsungcloud.com/aSkZ1VAmP02w