சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

நான் வாழவே எனது வாழ்க்கை

முயன்று பார்க்கின்றேன் முழுதாய் முடியவில்லை
இயன்ற வரை எட்டிக்கொள்வேன் நினைத்த எல்லை
பயணித்தே சுயமாக எதிர்கொள்வேன் வருந்தொல்லை
தயவுசெய்து யாரும் உரைக்கவேண்டாம் எதிர்மறைச்சொல்லை

சுற்றும் உலகில் காற்றைப்போல சுற்றித்திரிவேன்
பெற்று நல்லனுபவத்தை வாழ்க்கையை அறிவேன்
கிட்டாதென பயமில்லை போராட்டம் புரிவேன்
எட்டாத கிளைகளின் கனிகளையும் பறிப்பேன்

எந்நிலை வந்து தந்தாலும் பேரிடரும்
என்நிலை பிரயத்தனத்துடன் பிராயணத்தைத் தொடரும்
முன்னிலையில் நமிக்கையின் நிகழ்வுகளே இடம்பெறும்
இந்நிலை காலாகாலமும் காலாவதியாகாமல் கூடவரும்

முன்வந்தே காலமும் என்னுடன் கைகோர்குமே
கண்முன்னே வாழ்க்கைச் சோலையும் பூப்பூக்குமே
மண்ணுலகம் என் தேவைகளைத் தீர்க்குமே
என் வாழ்வும் அர்த்தமதைச் சேர்க்குமே

ஜெயம்
13-12-2022
https://linksharing.samsungcloud.com/mndTD5e5HD53