மாறிவிட்ட மானுடவுலகு
உலகம் இப்போ மாறிவிட்டது
கலகம் எங்கும் மீறிவிட்டது
பழக்கம் புதிதாய் ஊறிவிட்டது
விலகி மனிதம் ஓடிவிட்டது
ஏனிந்த மிருக வெறியாட்டம்
தானெனும் அகந்தையின் கூட்டம்
மானிட குணமின்றியே காட்டம்
பேனிடா நேயத்தை அழிவூட்டும்
உயிர்களைக் கொன்றா சந்தோசம்
பயத்தினால் சூழ்ந்தது மண்தேசம்
ஜனநாயகமென்றே சாயம் பூசும்
மனநோயாளிகளால் மனிதமும் கூசும்
முப்போதும் ஏக்கமா ஆழ்வது
எப்போது சமாதானம் சூழ்வது
இப்போதும் வரலாம் வீழ்வது
தப்பித்தான் எப்படி வாழ்வது
புதிதாய் பிறந்த பிஞ்சும்
சதிகாரர் செயலால் அஞ்சும்
தவிப்பொன்றா இறுதியில் மிஞ்சும்
புவியெப்போ வாழ்வினைக் கொஞ்சும்.
ஜெயம்
27-03-2022