கனவு நிஜப்படுமோ
எல்லைமீறி மனதில் புதைத்த ஆசைகள்
தொல்லைதந்தே உள்ளத்து உள்ளிருந்து ஓசைகள்
சொல்லிமுடியாது தினமும் காணும் கனவுகள்
அள்ளியதை எடுத்து அசைபோடுமே நினைவுகள்
கனாக் காணவென வந்துகொண்ட பருவம்
வினாக்கு விடைதேடி அலைந்துவிடும் உருவம்
பினாத்திக்கொண்டு பித்துப் பிடித்தநிலை புரிந்திருந்தும்
அனாதையாக்கிவிடும் கூடாவிட்டால் சொந்தங்கள் அருகிருந்தும்
பலித்திடாதோ விழிமூடிக் காணுகின்ற சொப்பனங்கள்
வழிந்துவிட தினத்திற்குள் உவகையின் கணங்கள்
களிகூரக் கண்டவைகள் நிகழ்ந்திடவே நேரில்
வழிவிட்டு நிகழ்த்திடாதோ விதியதுவும் பாரில்
ஜெயம்
22/11/2022