சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும்

போர் செய்யும் நோக்கம் அகற்றி

பார் காக்கும் எண்ணம் புகுத்தி

தார்மீக சிந்தனையை மனதிற்கு புகட்டி

யார்யாரோ அவர்களை ஒன்றாய்த் திரட்டி 

இந்த பூமியில் விளையட்டும் சமாதானம் 

அந்தத் தன்மையே செய்திடும் பெருந்தானம் 

நொந்த வாழ்க்கையை பேரழிவால் காணும் 

சொந்தங்களைப் பார்த்தாவது உணர்வோமே நீயும்நானும் 

அதிகாரம் செய்வோர்கள் உங்கள் கவனத்திற்கு

சதிகாரர்கள் வேண்டாம் எங்கள் புவனத்திற்கு

கதிகலங்கவைக்கும் செயற்பாடுகளைக் கொண்ட குணத்திற்கு

விதித்து தண்டனை செய்யாதேதீது மனிதவினத்திற்கு 

ஜெயம்

24-03-2022