சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

பணி 

பணி செய்து கிடப்பது நல்லதொன்று

தனித்தாலும் துணிந்து தொடர்ந்திடு அன்றன்று 

பேருக்கென்று இல்லாது ஊருக்கென்று உலகிற்கென்று

யாருக்கென்றில்லாது உனைத் தாங்கும் பாருக்கென்று  

கண்முண்ணே சொந்தம் வாழாது திண்டாடலாமா

உண்டு நீமட்டும் நித்தமாய்க் கொண்டாடலாமா

உன்னால் முடியும் உதவிக்கரங்களை நீட்ட 

உன் போல பிறரையும் நேசித்துக்காட்ட 

கோவிலிலுள்ள சிலைகளிற்கெல்லாம் காணிக்கை எதற்கு 

சாவின் விளிம்பிலுள்ளோரின் அவலத்தை அகற்று 

எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வோமே முடிந்தவற்றை 

எதிர்கொள்ளும் வாழ்க்கையிலே சுயநலங்கள் முடித்தவற்றை 

ஜெயம்

21-03-2022