சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

நிர்மூலம்

இனமொன்றை நிர்மூலமாக்க அதிகாரம் துடிக்கின்றதே
பிணந்திண்ணி கழுகுகளாய் உயிர்களைக் குடிக்கின்றதே
என்னபாவம் செய்தார்களிந்த தமிழர் இனம்
கண்ணீர்விட்டு கதறினாலும் இரங்கவில்லை அரக்கரினம்

வேரோடறுக்க எடுத்துவிட்டார்கள் வலியோர் முடிவு
போராடியும் எளியோர் இல்லையொரு விடிவு
வணங்குகின்ற கடவுளுக்கும் தீர்த்துவைக்க நேரமில்லை
கணக்கின்றி மடிந்திடினும் எட்டியுந்தான் பார்ப்பதில்லை

அடிமையாக இருப்பது என்பது தொடர்கதையாக
கொடியவர்கள் அருகினிலே வாழ்க்கை சித்திரவதையாக
மண்ணொண்ணையும் நீருமாக ஒட்டாமல் வேற்றுமை
என்றுமே வரமாட்டேனென ஓட்டெமெடுத்ததே ஒற்றுமை

புத்தரை பின்பற்றி வாழ்ந்திடும் கூட்டம்
சத்தியம் தவறியே தலைகீழாய் ஆட்டம்
சாத்தியமில்லை இனிமேலும் இவர்கள் திருந்துவதற்கு
ஆண்டுகளெத்தனை போனாலும் முடிவொன்று வருவதற்கு