வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 715

விடியாத இரவொன்று

விடியாத இரவென்று ஒன்றும் இல்லை
முடியாத துயரென்று என்றும் இல்லை
உழைத்தால் வாழ்க்கை வெளிச்சம் அடையும்
மலையைப்போல சுமையும் துகளாய் உடையும்

முயற்சியதை தொடராவிட்டால் இயலுமானதும் முடியாதுதான்
உயற்சியேது அங்கு விடிந்தாலும் விடியாததுதான்
மின்மினி பூச்சிகளுக்கு இரவென்ன
திரியவில்லையா
விண்ணிலே நிலாவின் உலாவும் தெரியவில்லையா

விலங்குகள் இல்லையேயென ஒப்பாரி வைப்பதில்லை
விளங்கிய மனிதனால் ஆயுளுக்கும் தொல்லை
அடுத்தவரோடு ஒப்பிடின் விடிவொன்று தானேது
விடுபடா இருளங்கே வெளிச்சமும் காணாது

பஞ்சப்பாட்டாய் பாடிக்கொண்டால் லட்சுமியுந்தான் நுழையுமா
பஞ்சிப்பட்ட வாழ்க்கையிலே சந்தோசந்தான் விளையுமா
குற்றஞ்சாட்டும் வாழ்க்கை வேண்டாமே இனியும்
மற்றவரை பார்க்காவிட்டால் வாழ்க்கையது கனியும்

ஜெயம்
13-03-2024
https://youtu.be/x2vWNYnqHts?si=mA9jshT3SGAKe9hI