சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

வேலி அடைப்போம்

பாவங்களின் ஆக்கிரமிப்பால் வாழ்க்கை தோற்கின்றது
சாபங்கள் தனைவாங்கி ஆயுள் தேய்கின்றது
தெரிந்தோ தெரியாமலோ ஒட்டிவிட்டே மனத்தோடு
புரிந்தோ புரியாமலோ குட்டிபோடும் தினத்தோடு

விலங்குகளுக்கு மேலென சொல்லுகின்ற இனம்
விலங்காகி சிதைத்திடும் குரூர குணம்
எல்லைமீறிய சுதந்திரத்தால் நினைத்தவைகளைச் சாதிப்பு
எள்ளளவும் தயங்காது இழைத்துவிடும் பாதிப்பு

இப்படியே போகுமென்றால் செத்துவிடும் நீதி
எப்படியோ போய்விட்டது வாழ்க்கையில் சரிபாதி
கடிவாளமில்லா குதிரையாக எங்கெங்கும் ஓட்டம்
அடிபட்டு எப்போது காணுமிங்கு மாற்றம்

அடைப்போமே மனதைச்சுற்றி வைராக்கிய வேலி
உடைத்துக்கொண்டே பாவமதன் ஆட்சி நாற்காலி
நுழைந்துமே ஆட்டிப்படைக்காது சாத்தான்கள் இனியும்
பிழையில்லா செயல்களுக்கே உள்ளமங்கே பணியும்

ஜெயம்
10-03-2024