வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 711

காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

காற்றில் மிதந்து வையகம் சுற்றும் ஒலியே
கேட்டுச் சுவைக்க ஓரூடகம் அது வானொலியே
இல்லம் நுழைந்தே தனிமையை விரட்டியே துணையாவாய்
உள்ளம் கவரும் நிகழ்ச்சிகள் தந்தே உறவாவாய்

மொழியின் வாசத்தை உள்ளம் உவந்தே நுகரும்
களிக்கும் செவிகள் கேட்பதால் பெருமைகள் அடையும்
தேனாக வார்த்தைகளை சிந்திடுவார் தொகுப்பாளர் நேரலையில்
காணாததைக் கண்டதென சிந்தையும் சிறைப்படும் காற்றலையில்

உணர்வுகளுக்கு ஊட்டச்சத்தளிக்கும் உற்சாகமான நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக
தினந்தினம் புதுப்புது பிரசவங்கள் ஒலிகளாகி வெளியாக
சிந்தனைத் திறனை பெருக்கிவிடும் விந்தையான பெட்டி
வித்தைகள் பலதைச்செய்தே இரசிகரை வைத்திடும் கட்டி

தேசம் கடந்தே தேடிவந்து அழகாக கதைபேசும்
நேசங்கொண்டவர் கேட்காவிடின் அன்று விடுமுறையெடுக்கும் சந்தோசம்
எத்தனையோ ஊடகங்கள் அறிமுகமாகலாம் அவணிக்கு புதிதாக
அத்தனையையும் மீறி காற்றலை இன்றும் புதிராக

ஜெயம்
15-02-2024
https://youtu.be/M71nGXCd3OY?si=cmNzpgrz40-lmeIh