சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

பிள்ளைக்கனியமுதே

உன் மழலை மொழியில் கரைந்தேனே
உன் புன்னகையால் உவகை அடைந்தேனே
அழகான பாசையை விழிகளும் பேசுமே
குழந்தையின் அருகில் குடியேறும் சந்தோசமே

சின்ன நிலவு சிந்தையைக் கவர்ந்ததென்ன
வண்ண மலரும் மயக்கம் தருவதென்ன
பூவொன்று கால்முளைத்து அசைவதென்ன எழிலாக
பாவொன்றை பாடி கவிஞனானேன் ஒருவழியாக

அப்பாவெனும் அந்தஸ்த்தை அளித்த செல்லமே
இப்போழுதும் எப்பொழுதும் நீதானென் செல்வமே
உணர்வுக்குள் இன்பத்தை செருகிய சுட்டிப்பெண்ணே
கனவையும் நிறைத்தாயடி கண்ணான கண்ணே

ஈரைந்து மாதமாய் சுமந்தவள் அன்னை
தரையதை அடையநீ உடைத்தாளே தன்னை
பொன்போன்ற முகங்காண சோகங்கள் தீர்ந்ததடி
எண்ணிலா பேரின்பம் எண்ணங்களைச் சேர்ந்ததடி

ஜெயம்
12-02-2024