சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

மாசி

பனியை பொழியாது பணிசெய்ய வாராய்
இனியும் குளிர்வேண்டாம் வெப்பத்தை தாராய்
எங்கோ ஒளிந்த பறவைகளும் வெளியே வந்து
எங்க மாசியென பாடிடுதே சிந்து

மெல்லனவே இருளகற்றி ஓளிர்ந்துவிடும் மாதம்
உள்ளத்துள்ளே குதூகலம் வந்துவந்து மோதும்
மேகம்விட்டு ஆதவனும் எட்டிப்பார்க்கும் நேரம்
தேகம்விட்டு சோம்பலதும் விடைபெற்றே ஓடும்

இறந்த மாதம் சென்றது தந்தே
பிறக்கும் மாதமும் தாராதோ வந்தே
மாசில்லா மகிழ்ச்சியது வாழ்க்கையிலே நுழையும்
மாசிவர கட்டவிழ்த்து கவலைகளும் கலையும்

ஜெயம்
29-01-2023