வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 707

பொங்கும் உளமே தங்கும் தையே

மலர்ந்த தை மகிழ்வதை தரும் தை
கலக்கத்தை கலைத்ததை விடும் தை
ஏக்கத்தை தீர்த்ததை நன்மையதை புரியும் தை
வருத்தத்தை ஆற்றியதை ஆரோக்கியத்தை கொடுக்கும் தை

மயக்கத்தை தயக்கத்தை நடுக்கத்தை அகற்றியதை
சிந்தை விரும்பியதை சிந்தியதை சிறப்புத்தை
சுகத்தை சேர்த்ததை சொர்க்கத்தை காட்டுந்தை
புதிய தை புதியதை அறிமுகப்படுத்தியதை இரசிக்கும் தை

பிரிவதை தடுத்ததை புரிவதை ஊட்டுந்தை
முடியாததை முடித்ததை கேட்டதை கொடுக்குந்தை
பாதை அமைத்ததை பாதத்தை காக்குந்தை
அழுத்தத்தை விலக்கியதை இன்பத்தை இறைக்குந்தை

எண்ணத்தை நிறைத்ததை உள்ளத்தை கவர்ந்த தை
காலத்தை கொடுத்ததை கோலத்தை பொலிவாக்கியதை
நம்பியதை தந்ததை ஆரம்பத்தை ஆரம்பித்த தை
வீழ்வதை தாங்கியதை வாழ்வதை வழங்குந்தை

கலகத்தை வேரறுத்ததை உலகத்தை விடுவிக்குந்தை
நேயத்தை கற்பித்ததை மாயத்தைப் போக்கியதை
நேசத்தை பாசத்தை காட்டியதை ஊட்டியதை
இத்தை மாற்றத்தை ஏற்றத்தை தரவந்த தை

சோகத்தை தொலைத்ததை காயத்தை ஆற்றுந்தை
ஆனந்தத்தை நனைத்ததை தினத்தை உருவாக்குந்தை
பணத்தை வாரியதை அளித்ததை கடன்தீர்க்கும் தை
வரவதை அதிகரித்ததை வாழ்வதை வளமாக்குந்தை

ஜெயம்
18-01-2024
https://youtu.be/5a_xHYeSpZ4?si=joganFQYwr0yw-GM