வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 700

விலாசத்திற்கு சொந்தக்காரன் நான் மட்டுமல்ல

மகிழ்ச்சி வடிவெடுத்து அரங்கேறிய நிகழ்ச்சியாக
அர்த்தங்களை காவி கணங்கள் சொட்டிக்கொண்டன
வாழ்த்தும் வார்த்தைகளை அகப்படுத்தியது அகம்
உறவுகளின் உன்னதங்களுக்குள் உருகிக்கொண்ட வேளையது

சந்தோச மிகுதியால் உள்ளம் தத்தளித்தது
செவிகளையுரசிய பாராட்டுக்கள் சுகங்களை பிரசவித்தன
இன்பம் பொழுதை ஆக்கிக் கொண்டாடியது
நம்ப முடியவில்லை கனவொன்று நிஜமானது

கொட்டிக் குவித்த கற்பனைகள் அற்புதமானது
சிந்தித்து வரைந்த வரிகளும் தத்துவமானது
எழுதிய பாக்களால் கவிஞனெனும் முகவரி
பிறவிப் பயனை அடைந்ததாக மனத்திருப்தி

பேரன்பு கொண்டவர்களுடனான பூலோகப் பயணம்
தாயும் சேயும்போல நிறைவாகியது சொந்தம்
இரசிப்பவர் மத்தியில் வாழ்தலே அருள்
அவ்வரத்தைப் பெற்றேன் இதுவே வாழ்க்கையானது

ஜெயம்
16-11-2023