வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 668

வாழ்க்கை யார்

வாழ்க்கை யார் வாழ்க்கையார் அவர் வாத்தியார்
கற்றுத்தருவதில் இங்கு அவரைவிட யார்
படித்த பாடங்கள் ஆயிரமாயிரமாய் முடிவில்லை
படித்தவற்றால் சோதனையில் சித்திபெற முடியவில்லை

முடிவு எப்போதென தெரியாத உலகில்
முடியாத பிரச்சினையாய் நாளாந்த வழக்கில்
சோதிப்பதற்கென்றே இந்த வாழ்க்கை இருக்கின்றது
பாதிப்பின் பின்னரே சாதிப்பு பிறக்கின்றது

இயன்றவரை முயன்றும் முடியாமை அனுபவங்கள்
யுக்திகளும் செயல்களுக்குள் செயல்படாத தருணங்கள்
கஷ்டங்கள் நஷ்டங்கள் சிரமங்கள் அவஸ்தைகள்
வெற்றியை அடைவதற்கான படிகளான நிலமைகள்

கசப்பும் இனிப்பும் காயங்களும் ஆறுதலும்
நிசமா நிழலா நியாயங்கள் மாறுதலும்
அமைதியை கெடுத்தும் கொடுத்தும் விளையாட்டு
சுமையென்றும் சுகமென்றும் இடைவேளை தான்விட்டு

ஜெயம்
02-11-2023