வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 665

ஆசிரியம் போற்றுவோம்

அறியாமை அகற்றிவிட்டு அறிவை   போதித்தார்
குறிப்பாக சொல்லப்போனால் இவரே சாதித்தார்
பெற்றோர்களையும் விட..
பெரும் மதிப்புக்கு உரியவர்கள்
கற்பித்து உருவாக்கிடும் ஆசிரியர் பெரியவர்கள்

அறிவினை வரையறையின்றி
மாணவர்களுக்கு அளிப்பார்
செறிவான கருத்துக்களை சிந்தை யெங்கும் தெளிப்பார்
வாழ்க்கையின் உச்சத்தை தொடவைத்த ஏணிகள்
சூழ்ந்த புகழுக்கு காரணமான ஞானிகள்

பிரம்பால் அடித்தது அப்போது வலித்தது
வரமாய் மாறியின்று எதிர்காலம் அளித்தது
அன்று அவர் உரைத்தது பலித்தது
நன்றாக வாழ்க்கையது மண்ணுலகில் துளிர்த்தது.

ஜெயம்
10-10-2023