சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

கவிஞனாய் பேரின்பம்

சந்தக் கவிகள் பாடிடச் சொல்லி
வந்து குதிக்குமே வார்த்தைகள் துள்ளி
சிந்திக் குவிந்திட்ட கருத்தினை அள்ளி
தந்திடும் மனமோ வைக்காதே தள்ளி

அழகான உணர்வதால் மனதிற்குள் கொண்டாட்டம்
மலர்களின் தேனதை உண்ணும் வண்டாட்டம்
பழகவே தமிழை தித்திக்கும் அமுதாட்டம்
அளவில்லா ஆனந்தம் திகட்டாது உற்சாகமூட்டும்

தொடர்ந்திட வேண்டும் அன்னையே பார்த்திடு
அடர்த்தியாய் அறிவினை இருக்கவே செய்திடு
இடர்பாடு வரினும் விரைந்தே தடுத்திடு
படர்ந்துமே பரவிட அருளைப் பொழிந்திடு

சருகென நினைத்ததைக் கூடவே இங்கு
மெருகேற்றிக் காட்டுவேன் கவியாக்கி அங்கு
கருவொன்று கிடைத்திட்டால் படைக்காது எங்கு
உருவாக்கி மகிழ்வதே கவிஞனின் பங்கு

ஜெயம்
24-09-2023