சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

தலையீடு ( மூக்கு நுழைப்பு)

பிறரது வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்காதே
அறத்திற்கு வையகத்தில் ஊறு இழைக்காதே
அவரவர் பாடுகள் போகின்றது நிறைவாக
சுவரைக்கட்டி பிரித்துவிட்டு மகழாதே மறைவாக

தேன்கூட்டை கலைத்துவிட பகீரதப் பிராயத்தனம்
ஏன் இந்த கேவலங்கெட்ட மனம்
மூன்றாம் மனிதர் சொல்கேட்பவர் பாவம்
தாண்டி வராதவரை கிடைப்பதெல்லாம் சாபம்

நன்மை செய்வதென்றே வலியவே உள்நுழைவார்
கண்ணைக் கட்டிவிட்டு குடும்பத்தைக் குலைப்பார்
தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளிடுவார்
கட்டுக்கதைகளை கூறியே பாதாளத்தில் தள்ளிடுவார்.

ஜெயம்
24-07-2023