சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராசா

சசிச

முள்ளிவாய்க்கால்

புனிதம் தூங்கி விழிக்காது போனது
மனிதம் மனதில் வறண்டு போனது
இரக்கம் இன்றி இருதயம் துடித்தது
வரலாற்று கொடுமை நிகழ்ந்து முடிந்தது

உலகம் இப்படித்தான் என்பது தெரிந்தது
நிலத்தின் நிறம் சிவப்பையும் மீறியது
பிறந்த மண் சுடுகாடாக மாறியது
திறந்திடாது கண்களை அகிலம் தூங்கியது

தேகங்கள் துடித்து விழுந்து மாண்டன
சோகம் விழிகளில் கண்ணீராய் கொட்டின
முள்ளிவாய்க்காலில் இனமொன்று வாழ்வு பட்டது
தள்ளிவைக்கும் குலமென பூமி கைவிட்டது

ஜெயம்
22-05-2023