வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-10

11-05-2023

வெறுமை போக்கும் பசுமை

பசுமையில் காண்போம் குளிர்ச்சி
மனங்களில் அகலும் வறட்சி
மரங்களை நட்டால் எழில்ச்சி
வேண்டாம் இனியும் எம் இனத் தளர்ச்சி

காடு களனிகளை இழந்து நாடுகளற்றவர்களாய்
அலைந்து ஓட
குண்டுமழைகளும் பொழிய

முற்சியற்றவர்களாய் வாழ
பூக்களும் காய்களுமாய் தொலைய
பசுமை இழந்த வெறுமைக்
கோலம் வேண்டாம் இனியும்.

பச்சை மரங்களை நாட்டி இச்சைக்கேற்றவற்றைத் தேடி
அற்றவர்க்கு ஈந்து கொடுக்க
மற்றயவை போக்கும் வெறுமை.

மனங்களில் கனங்கள் இறங்கி
வனங்களில் பழங்கள் ஏறி
எம் இனங்கண்டு சேர்ந்து வாழ்ந்து இன்பமாய் வாழ்வோம் என்றுமே..

நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.