சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-38
28-05-2024

வேள்வி

எம் மண்ணின் விடுதலைக்காக
வேள்வியானீரே
மாற்றான் கை போக
மடிந்து போனீரே

விண்ணில் போனாலும்
விதையானீர் மனங்களிலே
விருட்டசமாய் வளர்ந்து
வேள்வி செய்வீரே…

கண்ணியமாய் நாமெல்லாம்
கவலையின்றி வாழ்வோம்
கடமையென்று புரிந்து
கைகோர்ப்போம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.