சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-37
21-05-2024

நிர்மூலம்

இயற்கையை அழிக்கத் துணிந்ததனால்
விளைந்தது மாசுக்களும், நோய்களுமே
உடலுக்கு தீங்கை வகுத்ததுவே
உயிரையும் குடித்து தீர்த்ததுவே!

சொந்த மண்ணில் பரிதவிப்பு
சொத்து சுகம் தொலைத்த நிலைப்பு
சொந்தமெல்லாம் பேரிழப்பு
சொல்லவொணா நிர்மூலம் எமக்கு

கருங்கல் தெய்வச்சிலையாய் வடிக்கப்பட்டு புனிதம் பெறுவது போல்
நினைவுக் கற்களும், தூபிகளும்
மரணித்துப் போனவர் ஆன்மா!

நிர்கதியும், நிர்மூலமும் கொண்டவர்க்கு
ஞாபகச் சின்னமும் நிர்மூலம்
இக்கதி பார்த்து கண் விழித்து
நீதிதேவதை பேசிடுவாளோ ??

ஊமைக் குரலாய் போயிடுமோ?
மண்வாசம் கண்ட பூமி
இரத்த வாடை வீச, நிர்மூலமாய்
மிஞ்சியவர் அழுகுரல் கேட்கவில்லையோ?

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.