சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-24

09-01-2024

வசந்தத்தில் ஓர் நாள்

பகலின் நீளம் அதிகரிக்க..
மனச்சோர்வு, பதட்டம் குறைய
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமினும் உடலில் யொலிக்க

உளவியல் ஊக்கம் கொண்டு
புத்துணர்ச்சி, மகிழ்ச்சி நிறைக்க
பல பல கவிதை பிறக்க,
பாமுகத்தில் நாமும் நிலைக்க,

சில சில மன வலிகள் போய்
இயற்கையின் மறுபிறப்பாய்
வசந்தத்தில் ஓர் நாள்
வந்துதிக்குமே வெகுவிரைவில்..

பச்சைக் காய் கனிகளையும்
இச்சை போல் உண்டு
மிச்சத்திற்கும் பல
பண்டிகைகளையும் கொண்டு

இலவசமாய் ஒக்சிஜனை சுவாசிக்க
இனியேது செலவு மருத்துவத்திற்கு??
இதை யோசி மனிதா நீயும்
இயற்கை போல் வசந்தம் வருமா ஓர் நாள்!.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.