🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23
05-12-2023
கலவரம்
கலவரங்கள் கொண்ட பூமியிலே
நிலவரத்தை மாற்ற வழியேதுமுண்டோ??
சிலவரங்கள் நீ புரியாமல்
பலவரங்கள் கேட்டென்ன பலன்!
வரலாற்றைப் பாடமாகக் கற்ற நீ
வரலாற்றில் சில பாடத்தையும் கற்று விடு
மணலாற்றில் அடிபாடு என்றிராமல்
மனவாற்றில் அடிபாடு அற்றவராயிரு
மனித நேயத்தை மரணிக்க விட்டால்
புனிதமாக வாழ்ந்திட மாட்டோம்
மாற்றான் துயரம் ஏந்தி வாழ்ந்தால்
தோற்றான் எவரும் இவ் உலகினிலில்லை!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.