வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம் 09

தை மகளே வருக…

தை மகளே வருக, 
போன”தை”விட்டுவருக.
நல்ல”தை”கொண்டு வருக
பிடித்ததைச் செய்து 
கண்டதை நினையாது 
காலத்தை வீணாக்காது
விட்டதைப் பெற்று 
பட்டதை மறக்காது
கெட்டதை நினைக்காது
செய்ததை மறந்து
கிடைத்ததைப் பகிர்ந்து
வரும் தையை வலிமையுடன் 
வதைக்கும் சக்தி கொண்டு
தை மகளே வருக!!!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.